
சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள்
சண்டைக்காரிகள்: ஆண்களைப் புண்படுத்தும் பக்கங்கள் - ஷாலின் மரிய லாரன்ஸ்
*****
பெண்களைச் சுற்றிப் புனித பிம்பத்தை எழுப்பி அவர்களை மலருக்கு ஒப்பிட்டுக் கண்ணீர் வடிக்கும் பொதுச் சமூகம் அவர்களின் போராட்டக் குணத்தைக் கண்டு அஞ்சுகிறது. எனவே அவர்களின் நியாயமான குரல்கள்கூட ஆணவத்தின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகின்றன. சமத்துவம் பேசும் பெண் ஆண்களின் மனதை அதிகம் புண்படுத்துகிறாள். சமத்துவம் குறித்த அவளுடைய ஒவ்வொரு சொல்லும் ஆணாதிக்கத்தின் மேல் சாட்டையடியாய் விழுகிறது. அவர்களைப் பொறுத்தவரையில் அவள் அடங்கப்பிடாரி, பஜாரி, சண்டைக்காரி. ஜாதி, மதம், வர்க்கம், குடும்பம், அரசாங்கம் எனும் ஆணாதிக்க நிறுவனங்களைப் பெண்கள் கேள்விக்குள்ளாக்கும்போது ஆண்கள் நடுங்கிப்போகிறார்கள். இந்தப் புத்தகம் அதையே செய்கிறது. இந்தப் புத்தகம் பேசும் பெண்ணியம் நீங்கள் இவ்வளவு காலமாகப் பழகிய பெண்ணியக் கோட்பாடுகளுக்கு மாறுபட்டது. இது ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த உழைக்கும் வர்க்கப் பெண்ணின் குரல். கீழே இருப்பவர்கள் கத்தினால்தானே மேலே கேட்கும்? அது ஆதிக்கவாதிகளைப் புண்படுத்தவே செய்யும். அப்பா, சகோதரன், கணவன், சாலையில் நடந்து செல்லும் யாரோ ஒருவன் என என் வாழ்க்கையை யாரோ தீர்மானிப்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல் வெளிப்பட்ட எழுத்துக்கள் இவை. என் உடலையும் என் சிந்தனையையும் கட்டுப்படுத்தும் ஆணாதிக்க நிறுவனங்களுக்கு எதிராக உருவான எழுத்துக்கள் இவை. ஆம். நான் சண்டைக்காரிதான். என் சமூகத்திற்காக, சக பெண்களுக்காக நான் சண்டை செய்தே ஆக வேண்டும். 'எனக்கு முன் ஒருத்தி செய்ததுபோல.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.