
பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா
தமிழினத்திற்கு உண்மையான எதிரிகள் யார் , உண்மையானத் தோழர்கள் யார் என்பதைத் தெளிவாகத்தெரிந்துக்கொண்டால் தான் நாம்மேற்கொண்டிருக்கும் பயணத்தின் இறுதியில் வெற்றிக்கொள்ள முடியும். பாகுப்பன் தன்னுடைய நூலின் தொடக்கத்திலேயே 'என்னுரை'யில் பக்கம் 31இல்(அவர் தமிழ் எண்ணில் பக்க எண் கொடுத்துள்ளார்)
"இமயமலைக்கும் விந்திய மலைக்கும், கங்கை ஆற்றுக்கும் சிந்து ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இருந்த ஆரிய வணிகத்திலிருந்த சூத்திரப் பட்டத்தைத் தமிழர்களுக்குச் சூட்டி இழிவு படுத்தினார் ஈ.வெ.ரா. தமிழர்களைப் பார்ப்பனர்களால் சூத்திரன்' என்று அழைத்ததாகக் கூறிய ஈ.வெ.ரா. 'சூத்திரர், சூத்திரர்' என்று திரும்பத் திரும்பச் சொல்லித் தமிழரிடம் ஒருத் தாழ்வு மனப்பான்மையை உருவாக்கினார்' என்று கூறுகிறார். இது எவ்வளவு உலகப் பெரும் பொய் என்பது வரலாறு படித்த அனைவருக்கும் தெரியும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.