
ஒவ்வொரு குழந்தைக்கும் ஒவ்வொரு தீர்வு
நம் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிதல் மட்டுமே அவர்கள் செய்ய வேண்டிய கடமையாக வரையறுக்கிறோம். அது நிகழாதபோது அவர்களைப் பொறுப்பற்றவர்களாக, அடங்க மறுப்பவர்களாக வரையறுக்கிறோம். தங்கள் விருப்பமின்மையைத் தெரிவிக்கும் மனஉறுதி இல்லாத குழந்தைகள், பெரியவர்களின் கட்டளைக்குக் கீழ்படிந்து நடந்துகொண்டாலும், மனதளவில் பெரிய பாதிப்பை அடைகின்றனர். பெரியவர்களுக்குக் குழந்தைகளின் உலகத்தைப் புரிந்துகொள்ளத் துணை தேவைப்படுகிறது. அவர்களைக் குறைசொல்லி விலக்கி வைப்பது ஒருபோதும் தீர்வு ஆகாது. மாற்றத்தை அங்கிருந்துதான் தொடங்க முடியும்.
- சூர்யா, நிறுவனர், அகரம் ஃபவுண்டேஷன்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.