
ஒரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் (விடியல்)
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திற்காக உலக முழுவதும் எத்தகைய அயோக்கியத்தனமான திரை மறைச் சதிவேலைகளை செய்து வருகிறது என்பதையும் வெளிச்சத்துக்கு கொண்டு வருகிறது இந்நூல்.
அமெரிக்க அரசு, உலக வங்கி, பன்னாட்டு நிதி நிறுவனங்கள் நடத்தும் பொருளாதார சுரண்டலை, ஊழலை அனுபவ ரீதியாக, எளிய சூத்திரங்களின் மூலம் விளக்கும் நூல் இது. இதுவே தமிழில் இந்நூலின் வெற்றிக்குக் காரணமாக இருக்கலாம். தோழர் சிவாவுக்குப் பிறகான விடியலின் இயக்கத்தைக் குறித்து கற்பிதங்களும் கற்பனைகளும் இணையத்தில் உலவும் சூழலில் தோழர் சிவாவின் எண்ணங்களை நிறைவேற்றுவது மட்டும்தான் விடியலின் அடிப்படையான, முதன்மையான நோக்கமாக இருக்கிறது என்பதற்கு மற்றொரு சான்று இந்தப் புதிய மொழி பெயர்ப்பு.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.