
நம் கல்வி நம் உரிமை
நம்தி மகஇந்து 'தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் இணைந்து வெளியிடும் நூல 'தி இந்து' தமிழ் நாளிதழில் நான்கு வாரங்கள் வெளிவந்த "நம் கல்வி நம் உரிமை' குறுந்தொடர் பல வகைகளிலும், ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும். ஏழை, பணக்காரர், ஆசிரியர், மாணவர் என்று சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் இந்தத் தொடரைக் கொண்டாடினார்கள். அரசுப் பள்ளிகள் மீதான ஏக்கம் எந்த அளவுக்குச் சமூகத்தில் நிலவுகிறது என்பதை இந்தத் தொடருக்குக் கிடைத்த வரவேற்பு வெளிச்சம் போட்டுக்காட்டியது. தனியார் பள்ளிகள் மீதான விமர்சனமும், வெறுப்பும் முணுமுணுப்பாக மட்டுமே இருந்துகொண்டிருந்த நேரத்தில் இந்தத் தொடர் வெளியானது எல்லோருடைய 'உணர்வுகளிலும் பொறி பறக்கச் செய்திருக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.