
முட்டையும் தட்டையும்
பகுத்தறிவு உரைகல்லில் உரசினால் தேறாத எதையும் புறந்தள்ளி விமர்சிக்கும் உரிமை பகுத்தறிவாளர்க்கு உண்டு, மூட நம்பிக்கைகள் உலகுக்கே சொந்தம் எனக் கூறும் வகையில் எல்லா மதம் சார்ந்த மக்களிடையேயும் மண்டிக் கிடப்பதால் கண்டிக்கின்றனர் பகுத்தறிவுவாதிகள், அவ்வகையில் உலகின் பெரு மதங்களாம் கிறித்துவம், இசுலாம் ஆகியவற்றின் பொய்மைகளையும் இவ்விரண்டின் ஆதி மதமாகிய யூதத்தின் பொய்மைகளையும் இச்சிறுநூல் அம்பலப்டுத்துகிறது, இந்தியாவில் உள்ள சீக்கியம் அண்மைக் காலத்தியதாக இருந்தாலும் அதனையும் விமர்சிக்கிறது. இந்துமதப் போலித் தன்மைகளைத் தோலுரித்த சித்தர்களைக் கொண்டே அம்மதத்தின் மீதான கருத்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அய்ந்து மதப் பொய்மைகள் அறிவுப் பூர்வமாகப் பொசுக்கப்பட்டுள்ளன.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.