
இனி ஒரு பெரியாரைப் பார்ப்போமா?
தேர்ந்த நல்ல நூல்களைத் தெரிந்து வெளியிட்டுத் தமிழுக்கு அணி சேர்க்கும் துணிவுமிக்க நண்பர் ராஜசேகரனின் பதிப்பகம் வெளியிடும் எனது மூன்றாவது நூல் இது.
தந்தை பெரியார்வர்கள் தான் என்னை எழுத ஊக்குவித்தார். தலைவர் கலைஞர் எனக்கு நல்ல வாய்ப்பளித்தார். என்னை நூலாசிரியனாகத் தூண்டியவர் - பண்ணது பழம் பெரும் நண்பர் - மூத்த பத்திரிகையாளர் சின்னக் குத்தூசி. அவைகளைத் துணிவுடன் - துடிப்புடன் - நூல்களாய் கொணர்ந்தவர் அன்பிற்குரிய ராஜசேகரன்.
போற்றுவார் போற்றலும் - தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே' என்றொரு மாகவிஞன் பாடியது போல் யாவும் மேற் சொன்ன பெரியோர்களுக்கே அர்ப்பணம்.
அன்புடன் உங்கள்,
செல்வேந்திரன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.