
என்று முடியும் இந்த மொழிப்போர்?
என்னுள் ஓர் ஏக்கம். இதுவரையில் ஏழு போராட்டங்களை நடக்கி முடித்து விட்டோம், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து! ஆனால், எதிர்பார்த்த முடிவு ஏற்படவில்லையே! இதற்கு என்னதான் தீர்வு? என்றுதான் முடிவு? உயர்தனிச் செம்மொழியாம் தமிழ் மொழி அதற்கு உரிய இடத்தைப் பெறுமா? அல்லது ஒருமைப்பாடு என்ற பெயரால் தமிழ் மொழி ஒழிக்கப்பட்டு, இந்தி ஆதிக்கம் நிலை பெற்று விடுமா? என்ற வினாக்களுக்கான விடைதான் இந்த நூல்! இதில் ஒரு தீர்வைச் சொல்லியிருக்கிறேன். இந்தத் தீர்வைப் பற்றி நின்றால் தமிழும், தமிழ் இனமும் வாழும்! இல்லையென்றால், எதிர்காலத்தில் இந்த மொழியும், இனமும் இருந்த இடம் தெரியாமல் மறைந்து போகும் என்று எச்சரிக்கை செய்வதற்கே இந்த நூல்!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.