தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்
1990களில் தலித்துகளின் வரலாற்றை மீட்டெடுக்க நடந்த ஆய்வு முயற்சிகளின் முன்னோடியாக இந்நூலைப் பார்க்க முடியும். புதிய வரலாற்றுத் தகவல்களின் அடிப்படையில், தலித் பார்வையில் கமலநாதனின் நூல் வரலாற்றை மறுவாசிப்புச் செய்கிறது.
இந்திய தேசியம் எனும் நிலைப்பாட்டிலிருந்து நோக்கும்போது பிரச்சினைக்குரியவையாகத் தெரியும் கிறித்துவமும், ஆங்கிலேய ஆட்சியும் இந்நூலில் புதுப் பரிமாணத்தைப் பெறுகின்றன. இவை இரண்டும் தலுத்துகளுடைய முன்னேற்றத்திற்கும், விடுதலைக்கும் வழிசெய்யும் காரணிகளாகச் செயல்பட்டன என்று கமலநாதன் கூறுவதை நாம் முக்கியமாகக் கணக்கிலெடுத்துக் கொள்ளவேண்டும்.
தலித் இளைஞர்கள் தங்கள் வரலாற்றை அறிந்து கொள்வதன் மூலமே தலித் விடுதலையை நோக்கி பயணிக்க முடியும் எனும் கருத்துடன் எழுதப்பட்ட இந்நூல், தமிழில் வெளிவருவது மூலமே அந்த இலக்கை அடைய முடியும்.
இம்மொழிபெயர்ப்பு இந்த முக்கியப் பணியை சரிவரச் செய்யும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.