
ஆங்கில மொழியின் சிறுவரலாறு: A Short History of English Language
- இன்று உலகை ஆளும் ஆங்கில மொழியின் கதை என்ன ?
- ஏன் ஆங்கிலத்தை இலத்தீன் எழுத்துக்களை வைத்து எழுதுகிறோம் ?
- Qவிற்கு பிறகு u மட்டுமே ஏன் வருகிறது? ஏன் பிற எழுத்துக்கள் வருவதில்லை ?
- Pneumonia, Pseudo போன்ற பல சொற்களில் P எழுத்து ஏன் ஒலிப்பதில்லை?
- Islandஐ ஏன் ஐலேண்ட் என்கிறோம்?
- ஐஸ்லேண்ட் என்று ஏன் சொல்வதில்லை ?
- ஆங்கிலத்திற்கும் தமிழிற்கும் இடையில் உள்ள ஒற்றுமைகளும் வேற்றுமைகளும் யாவை ?
- ஆங்கிலத்திற்கு ஷேக்ஸ்பியர் பங்களித்த அளவிற்கு தமிழுக்கு பங்களித்தது யார் ?
- ஆங்கில மொழியின் வரலாற்றிலும் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ளவேண்டிய பாடம் என்ன ?
போன்ற கேள்விகளுக்கு விடையளிப்பதுடன் மட்டுமல்லாது ஆங்கில மொழியின் இருபது நூற்றாண்டுகால கதையை எளிய தமிழிலில் விளக்கும் நூல் இது.
ஆங்கில மொழியின் வரலாறு குறித்து நான் தேடி படித்தது ஒரு சுவாரசிய கதை. அதையும் நூலின் இடையில் கூறியுள்ளேன். ஆங்கிலம் எடுத்துக்கொண்ட தமிழ் சொற்கள் பற்றியும் பேசியுள்ளேன்
நூலின் இடையிலேயே விளக்கினால் வாசிக்கும் வேகம் குறையும் என்பதால் சில விளக்கங்களை இறுதியில் குறிப்புகளாகவும், எண்சைக்ளோபிடியா பிரிட்டானிக்கா, ஆங்கில விக்கிபிடியா கட்டுரைகள் மற்றும் முக்கிய தளங்களின் இணைப்புகளாகவும் தந்துள்ளேன். அவற்றையும் வாசித்து பாருங்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.