பெரி்யாரும் கம்யூனிஸ்டுகளும்
மேல் ஜாதி, கீழ் ஜாதி என்றும் மேல் ஜாதி (பார்ப்பனர்) உழைக்க வேண்டியதில்லை, கீழ் ஜாதி உழைக்க வேண்டும் என்றும் சொல்லப்படும் ஒரு நாட்டில் இந்தக் கம்யூனிஸ்ட் வீரர்களைத்தான் கேட்கிறேனே, இன்றைய பேதங்களின், இந்தப் பேதங்களை, பேதத்தின் காரணங்களைச் சொல்லுகிறவர்களைப் பார்த்து இது பிற்போக்கு சக்தி வகுப்புவாதம் என்று சொல்லுவது என்றால் என்ன நியாயம்?... மற்ற நாடுகளில் பார்ப்பனர் இல்லை . பறையன் இல்லை. இந்தப் பார்ப்பான் - பறையன் என்ற பேதத்திற்கு ஆதாரமான கடவுளும் இல்லை. சாஸ்திரமும் இல்லை. நடப்பும் இல்லை .. நான் ஒன்றும் கம்யூனிசத்திற்கோ சோஷியலிசத்திற்கோ விரோதி யல்ல. மற்றவர்களைவிட கம்யூனிசத்திலும் 'சோஷியலிசத்திலும் எனக்கு மிகுந்த பற்று, ஆர்வம் , உண்டு. ஆனால் கம்யூனிசமும் சோஷலிசமும் இந்த நாட்டுக்கு ஏற்ற முறையில் அமைக்கப்பட வேண்டும், கம்யூனிசத்திற்கும் சோஷலிசத்திற்கும் அதாவது, அபேதவாதத்திறக்கும் எதிராக பேதம் வளர்க்கும் பெரும் 'ஆட்களாய் இருக்கிற பார்ப்பனர்கள், பார்ப்பனத் தன்மைகள் ஒழிகிற வரையில் இந்த நாட்டில் கம்யூனிசமோ , சோஷியலிசமோ ஏற்பட முடியாது.