நடுகற்கள் காட்டும் பண்டைத்தமிழர் வாழ்வியல்
நடுகற்கள் தொடர்பாக சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும், கல்வெட்டுகளும் இவர் வழங்கும் செய்திகளுக்கு இப்புத்தகத்தில் இடம்பெறுகின்றன.
நடுகற்கள் காட்டும் பண்டைத் தமிழர் வாழ்வியல்.
உள்ளடக்கம்
1. நடுகல்
2. நடுகல் இலக்கணம்
3. நடுகல் வழிபாடு
4. நடுகற்களில் தொறுவும் பூசலும்
5. நடுகற்கள் காட்டும் பழங்குடிகளும் அரசியல் புவியியலும்
6. நடுகற்கள் காட்டும் பொருளியல் வாழ்க்கை
7. நடுகற்கள் காட்டும் பண்பாட்டுக் கூறுகள்
பல நடுகற்களைக் கண்டெடுத்துக் களஆய்வு செய்து அறிஞர் ப.வெங்கடேசன் அவர்கள் இந்த நூலை உருவாக்கியுள்ளார். நடுகல்லின் படங்களை ஆங்காங்கே பொருத்தமான முறையில் இணைத்திருக்கிறார். நடுகல்லே இல்லை என்று நினைத்திருந்த காலம் ஒன்று உண்டு. இந்த நூலாசிரியர் செங்கம் முதலான பல்வேறு இடங்களில் நடுகற்களைக் கண்டு, ஆய்வுசெய்து விளக்கம் தந்து தமிழர் வரலாற்றுக்கு வெளிச்சம் ஊட்டியிருக்கிறார். இந்த நூல் பண்டைக்காலத்தையும் இடைக்காலத் தையும் இணைக்கிறது.
சங்க இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் கல்வெட்டுகளும் இவர் வழங்கும் செய்திகளுக்குச் சான்று பகருகின்றன. நூல் முழுதும் செய்திக் களஞ்சியமாகவே விளங்குகிறது.