
அயோத்திதாசர் ஆய்வுகள் - பகுதி 2
பண்டிதர் அயோத்திதாசருக்குப்பின் கோலார் தங்கவயல் பகுதியில், 'தமிழன்' என்ற பெயரில் ஏடு நடத்திய அப்பாத்துரையார் அவர்கள் அயோத்திதாசரின் நூல்களை மறு வெளியீடு செய்துவந்தார். அவர் கடைசியாக வ.ஆ. மாவட்டம் வாலாசா வட்டம் எங்கள் கிராமத்திற்கு அருகில் உள்ள வன்னிவேடு கிராமத்தில் வசித்த பாவலர் கங்காதரன் அவர்களுடன் வந்து தங்கியிருந்தபோதுதான் இயற்கை எய்தினார்.
பாவலர் கங்காதரன் அவர்களின் மகன் வாசு. அவர்களிடமிருந்து இந்த நூல்களை பெற்றுதந்த தோழர் பெ. தனராசு அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.