கண்டத சொல்றேன்
தெரிந்த வரலாற்றின் தெரியாத பக்கங்கள், என்ற எனது முதல் நூலை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகம் எழுத வேண்டும் என்று நண்பர்கள் தொடர்ந்து கேட்டுவந்தார்கள்.
அது என்ன இரண்டாவது பாகம், என்று மரபா, மரபுகளை உடைப்பது தானே நமது வேலை, அதனால் தான் இந்த நூலை, “கண்டத சொல்றேன்” என்று பெயர் வைத்தேன்.
முதலில் “கண்டதை சொல்கிறேன்” என்று தான் பெயர் வைக்க நினைத்தேன், பிறகு அது என்ன தூய தமிழ் நடையில் தான் பெயர் வைக்க வேண்டுமா, என்று நினைத்து கண்டத சொல்றேன் என்று மாற்றிவிட்டேன்.
இந்த பெயரின் பொருள், கண்டத பற்றியும் சொல்றேன், என்று வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளாலாம், அல்லது நான் கண்டறிந்தவற்றை பற்றி சொல்கிறேன் என்று வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளலாம்.
முதல் நூலை போலவே, நீங்கள் இதுவரை கேள்விப்படாத செய்திகள், தெரிந்த செய்திகளில் மறைந்திருக்கும் உண்மைகள், என உங்கள் எதிர்ப்பார்ப்புக்கு குறைவைக்காத அளவுக்கு என்னால் முடிந்தவரை எழுதியிருக்கிறேன்.
உங்கள் விமரிசனத்துக்கு காத்திருக்கிறேன்.