
தண்டனை
அரசியல் செய்வது என்பது மக்களை ஆளத் தெரிந்து கொள்வதாகும். இந்தத் தொழிலைக் கற்றுக்கொள்ள நம் பிள்ளை விரும்பினான். இதில் தோல்வி கண்டுவிட்டான். அதற்கான தண்டனை அவனுக்குக் கிடைத்திருக்கிறது. வேறு நாடாக இருந்திருந்தால் அவனுக்குப் பாராட்டுக் கிடைத் திருக்கும். நம் நாட்டில், தங்கள் அதிகாரத்தைப் பயன் படுத்தக்கூடிய ஆற்றல் கொண்டவர்களுக்கென ஒதுக்கப் பட்ட துறையொன்றில் யாரும் போட்டிக்கு வருவதை அவர்கள் விரும்புவதில்லை. இத்துறையில், தான் செய்த தவறுக்காக வருந்தும்படிச்செய்ய இவனை அவர்கள் ஒரேயடியாகச் சோர்வடையச் செய்கின்றனர். பிரச்சினை தெளிவாகத் தெரிகிறது. நம் பிள்ளை ஏமாந்துவிட்டான். நமக்குச் சொந்தமில்லாத துறை ஒன்றில் முயன்று திசை மாறிவிட்டான்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.