பெண் - மரபிலும் இலக்கியத்திலும்
இச்சூழலில் பெண்-மரபு-இலக்கிய வெளிப்பாடு என்ற முப்பரிமாணத்தில் நமது பார்வையைச் செலுத்தத் தூண்டும் முகமாக- இத்துறையில் ஒரு முதல் முயற்சியாக இந்நூல் வெளிவருகிறது. பெண்ணியப் பார்வையில் ஆழமான ஈடுபாடு கொண்டவர். இந்தப் புத்தகத்தின் கட்டுரைகள் பல தளங்களில் மேலும் சிந்திக்கத் தூண்டும், ஆராயத் தூண்டும் வகையில் அமைந்துள்ளன. மரபு என்பது 'பழமை' அல்லது 'தொன்மை' என்ற பொருள் பயக்கும். இஃது எழுதப்படாத சமூகச் சட்டமாகும். ஆணுக்கும் பெண்ணுக்கும் உரிய ஒன்றாக, ஒரு சமூகத்தி னரின் பண்பாட்டைக் கட்டிக் காப்பதற்காக அவ்வவ் சமூகத்தாராலேயே தொன்மை காலத்தில் உருவாக்கப்பட்டு, காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருவதாகும். மக்கள் தலைமுறை தலைமுறையாகக் குழுவாகச் சேர்ந்து கற்பித்துக் கொண்ட நடத்தை முறைகளும் நம்பிக்கை களும் பழக்க வழக்கங்களும் சேர்ந்த தொகுதியே மரபு என்று சமூக விஞ்ஞானிகள் விளக்கம் தந்துள்ளனர். கவிஞர் ஜெயபாஸ்கர் 'மரபு' என்ற கவிதையில், பெண் மரபில் அடிமைப்பட்டக் காலத்தைக் எவ்வாறு வரையறுக்கலாம் என சொல்லப்பட்டுள்ளது.