மணமக்களுக்கு உறுதிப்பாடு!
Original price
Rs. 30.00
-
Original price
Rs. 30.00
Original price
Rs. 30.00
Rs. 30.00
-
Rs. 30.00
Current price
Rs. 30.00
சுயமரியாதைத் திருமணங்கள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடக்கத் தொடங்கிவிட்டால், நாட்டிலே பரவிக்கிடக்கும் மூடக் கொள்கைகள் தாமாகவே சீந்துவாரற்றுப் போய்விடுமே ஆகவேதான் இப்படிப்பட்ட மணம் செய்துகொள்ளும் இந்த மணமக்களை நான் பெரிதும் பாராட்டுகிறேன், மனதார வாழ்த்துகிறேன்
16-8-1954-ந் தேதி சூளையில் நடைபெற்ற ஒரு சீர்திருத்தத் திருமணத்தில் அண்ணா அவர்கள் ஆற்றிய தலைமைப் பொழிவு வருமாறு:
இந்தப் பகுதியிலே இப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தத் திருமணம் நடைபெறுகிறதென்று தெரிவித்தும் அதிலே வந்து என்னைக் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக் கொண்ட நண்பர்களுக்கு எனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் பகுதிக்கு நான் பெரிதும் வந்ததில்லை. இந்த வீதிகளிலே நான் அடிக்கடி நடமாடியதுங் கிடையாது. இன்று நான் இத்திருமணத்திற்காக வந்தவுடன் இங்குள்ள தோழர்கள் காட்டிய அன்பும் ஆதரவும், அவர்களிடம் காணப் பட்ட ஊக்கமும் உற்சாகமும் எனக்கு உண்மையிலேயே பெரிதும் மகிழ்ச்சியளித்தன.
இந்த அளவு அன்பும் ஆதரவும், ஊக்கமும் உற்சாகமும் நிறைந்த மக்களுடன் நான் வீதியிலே வந்தபோது காலையிலே நான் கண்ட காட்சிகளும், கண்களிலே எதிர்ப்பட்ட நிலைமைகளும் எனக்கு இத்திருமணத்தைவிட வேறு பல அதிகமான எண்ணங்களை உண்டாக்கிவிட்டிருக்கின்றன.