
பிள்ளை பெறுவதை நிறுத்துங்கள்!
பெண்களுக்குப் பிள்ளைகள்பெறும் தொல்லை ஒன்று இருப்பதால் தாங்கள் ஆண்கள் இல்லாமல் வாழமுடியும் என்பதை ருஜுப்படுத்திக்கொள்ள முடியாதவர்களா யிருக்கின்றார்கள். ஆண்களுக்கு அந்தத் தொந்தரவு இல்லாததால் தாங்கள் பெண்கள் இல்லாமல் வாழ முடியும் என்று சொல்ல இடமுள்ளவர்களா யிருக்கின்றார்கள். அன்றியும் அப்பிள்ளைபெறும் தொல்லையால் தங்களுக்குப்பிறர் உதவி வேண்டி யிருப்பதால் அங்கு ஆண்கள் ஆதிக்கம் ஏற்பட இட முண்டாய் விடுகின்றது. எனவே உண்மையான பெண்கள் விடுதலைக்கு பிள்ளைபெறும் தொல்லை அடியோடு ஒழிந்து போகவேண்டும். அது ஒழியாமல் சம்பளம் கொடுத்து புருஷனை நியமித்துக் கொள்வதா யிருந்தாலும் பெண்கள் பொதுவாக உண்மை விடுதலை அடைந்துவிட முடியாது என்றே சொல்லுவோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.