
ஜாதி ஒழிய வேண்டும் ஏன்? :பெரியார்
தீண்டாமை ஒழிப்புக்கோ ஜாதி ஒழிப்புக்கோ நீங்கள் முதலில் உங்கள் மதத்தை ஒழித்தாக வேண்டும். மதத்தை ஒழிக்க , உங்களால் முடியவில்லையானால் மதத்தைவிட்டு நீங்களாவது விலகியாக வேண்டும். உங்கள் மதம் போகாமல் ஒரு நாளும் உங்களது தீண்டாமைத் தன்மையோ, பறைத் தன்மையோ ஒழியவே ஒழியாது என்பது கல்லுப்போன்ற உறுதி. உதாரணம், வேண்டுமானால், இதுவரையில் தீண்டப்படாதவர்களாயிருந்து, மனித சமூகத்தில் தீண்டக் கூடியவர்களாக ஆன எவரும் தீண்டப்படாதவர்களாய் இருந்த போது அவர்கள் மீது சுமத்தப்பட்டிருந்த மதத்தை உதறித் தள்ளிவிட்ட பின்புதான், தீண்டத்தக்கவர்கள் ஆகி இருக்கிறார்கள்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.