
தமிழரசு கலைஞர் செய்திகள் - சிந்தனைகள் - சாதனைகள்
கலைஞரின் எழுத்துகள் எல்லாம் ஓரளவு முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. ஆனால், பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றிய உரைகள் எல்லாம் முழுமையாகத் தொகுக்கப்பட்டுள்ளனவா என்றால் அது சந்தேகமே. சட்டமன்றத்தில் கலைஞர் நிகழ்த்திய உரைகள் தவிர, இதர நிகழ்ச்சிகளில் அவர் ஆற்றிய உரைகள் எல்லாம் இன்னும் முழுமையாகத் தொகுக்கப்படவில்லை. மக்கள் நலத்திட்டங்களை வழங்கும் நிகழ்ச்சிகளின் போது, அவர் ஆற்றிய உரைகளில்தான் அவரிடமிருந்து வீரியமான சிந்தனைத் தெறிப்புகள் வெளிப்பட்டிருக்கின்றன. அத்தகைய சிந்தனைகளை எல்லாம் இந்தப் புத்தகத்தில் நீங்கள் காணலாம். அந்த விதத்தில், இது ஒரு முக்கியமான ஆவணமாகத் திகழும் என்பதில் சந்தேகமில்லை.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.