
நூற்றுக்கு நூறு சுவையான தகவல்கள்: பெரியார் - அண்ணா - கலைஞர் - தளபதி
தரமான மலர்களை தேடிச் சென்று அவற்றிலிருந்து இனிமையான தேனை சேகரித்துத் தரும் தேனீயைப் போல இந்த நூலில் உள்ள தகவல்களை ஒரு தேனீ போன்ற சுறுசுறுப்புடன் சளைக்காமல் பணியாற்றி தொகுத்திருக்கிறார் சபீதா ஜோசப். திரைத்துறையைச் சார்ந்தவராக அவர் இருந்தபோதும் எழுத்துத்துறையில் அவரது உழைப்பு வியக்க வைக்கிறது.தலைவர்கள் பெரியார், அண்ணா, கலைஞரோடு இன்றைய முதல்வரைப் பற்றியும் நூறு, அரிய தகவல்களை வாசகர்களுக்கு தொகுத்தளித்திருக்கிறார்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.