
பௌத்த மறுமலர்ச்சி முன்னோடிகள்
அறத்திற்கும் அடிப்படைவாதங்களுக்குமான சிந்தனைப் போர் உலகம் முழுவதும் நடைபெற்று வருகின்றது. இன்றைய இருபத்தியோராம் நூற்றாண்டில் அடிப்படைவாதம் உலகப் பெருமுதலாளித்துவத்துடன் இணைந்து, பாரதூரமான தாக்கங்களை மனிதச் சமூகத்தில் ஏற்படுத்தி வருகின்றது. இச்சூழலில் சிந்தனைச் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், பகுத்தறிவு உள்ளிட்ட சிந்தனைப் போக்குகளை விதைத்த புத்தர் மிகவும் தேவைப்படுகின்றார். அவரை நவீன காலத்திற்குக் கொண்டுவந்த மாமனிதர்களின் பங்களிப்புகளை இந்த நூல் விளக்குகின்றது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.