
திராவிடம் வென்றது (கவிதை திரட்டு)
இந்த நூலில் மொத்தம் 28 கவிதைகள் இருக்கின்றன. திராவிட இயக்கம் எழுத்தால், பேச்சால் அதன் விளைவாக எழுந்த எழுச்சியால் வளர்ந்த இயக்கம். வாள் முனையைவிடப் பேனாவின் முனை கூர்மையானது என்பதை உணர்ந்த இயக்கம். அதனை இந்தியத் துணைக்கண்டத்திற்கே உணர்த்திய இயக்கம். அந்த வகையில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் துணைப் பொதுச்செயலாளர் அன்பு உடன்பிறப்பு இராம. வைரமுத்து அவர்கள் எழுதுவதில், பேசுவதில் தனித்தன்மையோடு விளங்கக் கூடியவர். படிப்பவர், கேட்பவர் எவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுபவர், பேசுபவர். அந்த வகையில் இவருடைய இந்தத் 'திராவிடம் வென்றது' என்னும் கவிதைத் திரட்டும் எளிமையாகவும் எவருக்கும் புரியும் வகையில் அமைந்துள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.