
திராவிட இந்தியா
திராவிட-ஆரியப் பண்பாட்டு முரண் என்பது இன்றும் விவாதப்பொருளாகவே இருக்கிறது. கடந்த நூற்றைம்பது வருடங்களில் இது குறித்த வரலாற்றுப் புரிதல் பல விதங்களில் நமக்குக் கிடைத்திருந்தாலும், வரலாற்றுத் திரிபுகளும் அதே அளவிற்கு அனைத்தையும் குழப்புவதற்காக முன்வைக்கப்படுகின்றன. இன்றைய இந்தியாவின் பண்பாடு, கலாச்சாரம் என்பது ஆரியர்களின் கலாச்சாரமாகவும், பண்பாடாகவும் மட்டுமே முன்வைக்கப்படுகின்றன. நூறாண்டுகளுக்கு முன், இந்த நூலின் ஆசிரியர் இதையே தன்னை எழுதச் செய்த முதன்மை காரணியாகக் குறிப்பிடுகிறார். இன்னமும் இந்தக் காரணம் நம்முடன் எந்த மாற்றமும் இன்றி இருக்கிறது. இன்றைய இந்தியாவில் திராவிடக் கலாச்சாரத்தின், இனத்தின் பங்களிப்பு என்ன என்பதைச் சுட்டிக் காட்டுவதே இந்த நூலின் நோக்கமாகும். அதைத் தேடும் வழியே திராவிட வரலாறும், அதன் பல்வேறு கருத்தாக்கங்களை முன்வைக்கப்பட்டு அலசப்படுகிறது. ஆசிரியர் அதன் வழியே சில முக்கியமான முடிவுகளை எட்டுகிறார். சிந்து வெளி நாகரீகம் திராவிடர்கள் நாகரீகம் என்பதிலிருந்து, திராவிட மொழியான தமிழ் தனித்துவமானது என்பது வரை நிறுவுகிறார். நூறாண்டுகளுக்கு முன் வெளிவந்த இந்த நூல் இன்றும் அதன் வரலாற்று, அறிவியல் தரவுகளால் நம்மிடையே உயிர்ப்புடன் இருக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.