தி.மு.க வரலாறு (1949 முதல் 1957 வரை)
திராவிட இயக்கத்தின் முக்கியமான வரலாற்றாசிரியர்களுள் ஒருவர் க. திருநாவுக்கரசு. ‘நீதிக்கட்சி வரலாறு’, ‘திராவிட இயக்க இதழ்கள் – ஒரு பார்வை’ முதலான முக்கியமான வரலாற்று நூல்களின் ஆசிரியர். இவர், தற்போது திமுகவின் வரலாற்றை விரிவாக ஆய்வுசெய்து ‘திமுக வரலாறு’ என்ற தலைப்பில் புத்தகமாக வெளியிட்டிருக்கிறார். திராவிட இயக்கத்தின் வரலாற்றை மிக விரிவாகவும் நுட்பமாகவும், ஆவணப்பூர்வமாகவும் எழுதி வருபவர் அண்ணன் திருநாவுக்கரசு தனது அயராத உழைப்பாலும், கழகத்தின் மீது அவர் கொண்டிருக்கும் காதலாலும் தி.மு.க தொடங்கிய 1949-ம் ஆண்டு முதல், பேரறிஞர் அண்ணா மறைவெய்தி தலைவர் கலைஞர் ஆட்சிப்பொறுப்பேற்ற 1969-ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தை விரிவாக எழுதியுள்ளார். தி.மு.க.வின் அரிமா நோக்குதான் அண்ணன் க.திருநாவுக்கரசு எழுதியுள்ள இந்த வரலாற்று நூல். இது கழகத்தினர் ஒவ்வொருவர் கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய ஆவணம்ஆற்றல்மிகு ஆயுதம்!
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.