தமிழர்களின் உண்மையான வரலாற்றைச் சுருக்கமாகப் பதிவு செய்யும் நூல். குறிப்பாக தமிழர்கள் வாழ்ந்தது எப்படி? வணங்கியது எப்படி? தமிழர் வாழ்வில் ஆரியர் ஊடுருவியது எப்படி? தமிழர் வீழ்ந்தது எப்படி? தமிழர்கள் இந்துவா? இந்து என்று சொல்லிக் கொள்வதால் எவ்வளவு இழிவு! தமிழினம் மீள்வது எப்படி? என்று தரவுகளோடு விளக்கம் அளிக்கும் நூல்.
தமிழ்த் தேசியம் என்ற பெயரில் சைவம், வைணவம், தமிழ் இந்து என்று பேசி தமிழர்களின் பெருமையை சீர்குலைக்கும் அரைவேக்காடுகள்; தொல்காப்பியத்தைத் திரித்து, ’மெய்யியல்’ என்று மூடச் செய்திகள் கூறும் அரைகுறைகள் அவர்களை நம்பி ஏமாறும் தமிழ் உணர்வுள்ள இளைஞர்கள் தெளிவு பெற இந்நூல் பெரிதும் பயன்படும்.
தமிழர்க்கு கடவுள் இல்லை, ஜாதியில்லை, மதம் இல்லை என்பதை ஆணித்தரமாய் உறுதி செய்யும் நூல்.