சாதியும்...
நமக்கு ஜாதி பற்றி அதன் தத்துவம் பற்றி தெளிவாக புரிகிறதோ இல்லையோ அது நமது அன்றாட வாழ்க்கையை அகத்திலும் புறத்திலும் கட்டமைத்தே செல்கிறது. முன்பும் அப்படித்தான் சென்றது. அம்பேத்கார் கூறியது போல் இந் நாட்டில் மதம் இல்லை; சாதிதான் உள்ளது. அது ஒருவனது அகத்தில் அவனை அவனுக்கு காட்டுகிறது. அல்லது அதன் வழியே அவனைத் தெரிந்து கொள்கிறான். தனது சக மனிதனிடமிருந்தும் அவனை வைத்துப் பார்த்துக் கொள்கிறான். அவனது இருப்பையே அது தீர்மானிக்கிறது. அதனால்தான் என்னவோ எத்தனை படிப்பும் எத்தனை உயர்ந்த வேலை வாய்ப்பும் வாய்த்த பின்னரும் சாதி ஒரு தாழ்த்தப்பட்டவனையும் பிற்படுத்தப்பட்டவனையும் விடுவதில்லை. அதனோடு அவன் நிதமும் போராடுகிறான். இந்த அகத்தோடு தொடர்புடையதுதான் புறம். அவனது வசிப்பிடம் முதல் அவனது உடல் மொழி வரை சாதிதான் தீர்மானிக்கிறது.
*பேரா. ஜெ.ஜெயரஞ்சன் அறிமுகவுரையிலிருந்து'