
பகத்சிங்கும் இந்திய அரசியலும்
இந்தியாவில் வீரம் செறிந்த வரலாற்றின் நாயகனாக பகத்சிங்கையும் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் போன்றோர்கள் பற்றி பள்ளி பாடநூல்களில் படித்திருந்தாலும் பகத்சிங் அவர்களின் உண்மை வரலாற்றை - இதுவரை தமிழ் நாடு அறிந்திராத வரலாற்றை ஆவணப்படுத்துகிறது இந்த நூல்.
இந்தியச் ஜாதியச் சமூகம் சுயமரியாதை அற்று ஆங்கிலேயனுக்கு அடங்கிப்போய் ஓர் அடிமைச் சமூகமாக இருப்பதை மாற்ற வேண்டும் என்ற தணியாத ஆசை அவருக்கு இருந்தது.
இந்தியாவின் சுதந்திரம் கருணையில் அடிப்படையில் பெறக்கூடாது அது வீரத்தின் கிடைத்த வெற்றியாக இருக்கவேண்டும் என்பதை தன் வாழ்வின் மூலம் நிருபித்த பகத்சிங்கின் போராட்ட வாழ்வியல் அரசியலோடு நம்மை பயணிக்க வைக்கிறது இந்த நூல்,
பகத்சிங் யார் என அறிந்துகொள்ள - இந்திய அரசியலின் ஒரு நூற்றாண்டுக்கு முன் இருந்த சூழலை புரிந்துகொள்ள இந்த நூலை அனைவரும் கட்டாயம் வாசிக்க வேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.