
பேசும் கலை வளர்ப்போம்
கலையை வளர்ப்போம் என்றால், கலையைக் கலைக்காக வளர்ப்போம் என்ற பொருளில் சிலர் கருத்து அறிவிப்பது ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல! "கலை என்பது கலைக்காக" என்றால், விளக்கு என்பது விளக்குக்காக என்று மட்டுமேயென விவாதிப்பது போலாகிவிடும். விளக்கு ஒளி தருவதற்காக! அதைப் போலவே கலையும், சமுதாயத் துறையில் - பொருளாதாரத் துறையில் - அரசியல் துறையில் - அறிவு ஒளியை, ஆராய்ச்சி ஒளியை, சிந்தனை ஒளியை, செயலாற்றும் ஒளியைத் தர வல்லதாகப் பயன்படுத்தப்பட வேண்டும். வீணை, யாழ், நாதசுரம் போன்ற இசைக் கருவிகளில் கலையை மட்டுமே காணுகிறோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.