சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர் (நூல் வரிசை -4/5)
சீர்திருத்தச் செம்மல் பானகல் அரசர்
தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட இழிவாய்க் கருதப்பட்ட மக்கள். அதாவது தீண்டத் தகாதோர் கீழ் சாதியார்பன சாதியா சூத்திரா என்பனவாகிய பிறவி இழிவும் பிறவி அடிமைத்தனமும் சுமத்தப்பட்ட சுமார் 20 கோடி இந்திய மக்களின் சுயமரியாதைக்கும். விடுதலைக்கும். சமத்துவத்திற்கும், மனிதத் தன்மைக்குமாக வேண்டி, பிரவாகமும், வேகமும் கொண்ட வெள்ளத்தில் எதிர் நீச்சு செய்வது போன்ற கஷ்டமான காரியத்தைக் கை கொண்டு அதில் இறங்கி வேலை செய்தவர்.
அவ்வேலையில் அவர்பட்ட கஷ்டத்தை யார் அறிவார் என்பது எமக்கே சொல்ல முடிவதாய் இருக்கின்றது. இந்தியாவில் ஆதிக்கமும்,செல்வாக்கும் பெற்ற சமூகத்திற்கு விரோதி: ஆதிக்கமும். செவ்வாக்கும் பெற்ற பத்திரிகைகளுக்கு விரோதி: ஆதிக்கமும் செல்வாக்கும் பெற்ற பிரச்சார கூலிகளுக்கு விரோதி! இவ்வளவுமல்லாமல் மதிக்கத்தக்க பிரதிநிதித்துவம் என்று சொல்லும் படியான நிலையில், நெருப்பின்மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர். இந்த வேலையில் ஈடுபடுபவர்களுக்கு என்ன குணங்கள் வேண்டும் என்பதற்கு ஒரு இலக்கணமாகவும் இலக்கியமாகவும் விளங்கினார்”.