புரட்சிக் கவிஞர் எனும் மானுடக் கவிஞர் உலகக் கவிஞர்
நோபல் பரிசுக்குரியவர் புரட்சிக் கவிஞர்
அன்றைக்கு இரவீந்திரநாத் தாகூர் அவர்களுடைய கீதாஞ்சலியை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து, மிகப் பெரிய அளவிற்கு முயற்சி எடுத்த காரணத்தினால், அவர் நோபல் பரிசு பெறக்கூடிய தகுதியுள்ளவரானார்.
அந்தத் தகுதி புரட்சிக்கவிஞர் அவர்களுக்கு வரும்படியாக நாம் செய்யத் தவறிவிட்டோம். அவருடைய கவிதைகள் ஆங்கிலத்தில் அல்லது பிரெஞ்சில் மொழி பெயர்க்கப்பட்டு, நோபல் பரிசுத் தேர்வு குழுவிற்கு அனுப்பப்பட்டு இருக்குமேயானால், அந்தக் காலகட்டத்தில், நோபல் பரிசுக்கு மேலும் தகுதி பெற்றவர் என்பதை உலகம் ஒப்புக்கொண்டிருக்கும்.
நோபல் பரிசுக்காக இதை நான் சொல்லவில்லை. புரட்சிக்கவிஞர் அவர்கள் புகழைப்பற்றி கவலைப்பட வில்லை. தந்தை பெரியாருக்கும் - புரட்சிக் கவிஞருக்கும் மிகப்பெரிய ஒற்றுமை என்னவென்றால். அவர்கள் கொள்கைக்காக வாழ்ந்தவர்கள். லட்சியத்திற்காக வாழ்ந்தவர்கள். நன்றியை எதிர்பார்க்காதவர்கள், புகழை நோக்காதவர்கள் - அந்த அளவிற்கு மானம் பாராத தொண்டு செய்யக்கூடிய வாய்ப்பைப் பெற்றவர்கள்.