
தொல் திராவிட மொழி கண்டுபிடிப்பு
அருமையும்பெருமையும்படைத்த இந்த நூலைப் பேராசிரியர் சுந்தர சண்முகனார் அரிதின் முயன்று தமிழ்ப்பெருமையை நிலைநாட்டியுள்ளார். அவருக்குத் தமிழுலகம் கடமைப் பட்டுள்ளது. திராவிட மொழிகள் பலவற்றையும் கற்றுத் தேர்ந்து தமிழ்மொழியுடன் ஒப்பிட்டு முடிவினை நிலைநாட்டியுள்ளார் பிறமொழிகளைப் படித்துவிட்டுத் தமிழைக் கூறுபோட்டுப் பிறமொழிகளுக்கு உட்படுத்தும் ஆய்வாளர்கள் நடுவில் தமிழின் பெருமையை நிலைநாட்டியுள்ளார் நூலாசிரியர். பல ஆய்வு நூல்கள் படைத்த நூலாசிரியரின் தெளிவான, எளிய, ஒப்பியல் நோக்கிலான மொழிநடையை அனைவரும் படித்து உணரவேண்டும். ஏற்கெனவே வெளிவந்துள்ள இந்த நூல் நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர் நூல் வரிசையில் இப்போது வெளிவந்துள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.