
கருஞ்சூரியன் நான்காம் பதிப்பு
ஒரு சூத்திரன் கொலை செய்தால் அவன் தலை வெட்டப்பட வேண்டும்.ஒரு பிராமணன் கொலை செய்தால் அவன் தலைமுடியை வெட்டினால் மட்டும் போதும்.இது வெறும் தர்மமாக அல்ல சட்டமாகவும் இருந்தது என்பதுதான் இனவரலாற்றில் மன்னிக்கமுடியாத மனிதப்பிழை.
மனுதர்மம் முன்மொழிந்ததைத்தான் இலக்கியங்களும் வழிமொழிந்தன. சீல குணங்கள் அற்றவனாயினும் பிராமணனை வணங்கு ஞானமுற்றவனாயினும் சூத்திரனை வணங்காதே என்ற பொருளில்
"பூஜிய விப்ர சீலகுண ஹூனா சூத்ர நகுணகன் ஞானபிர வீனா"
என்று எழுதிப் போகிறது துளசிதாச ராமாயணம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.