மெனோ பிளேட்டோ
மெனோ பிளேட்டோ - பெஞ்சமின் ஜோவெட்
*****
பிளேட்டோவின் நூல்கள் அனைத்திலும், சாக்ரடீஸுடன் உரையாடுபவர்கள் அதுநாள்வரை தங்களையும் அறியாமல் தங்களுக்குள் இருந்த கருத்து முரண்பாடுகளையும், குழப்பங்களையும் தெரிந்து கொள்கின்றனர். சாக்ரடீஸின் இடைவிடாத கேள்விகளின் மூலமாக அக்குழப்பங்களுக்கான தெளிவான விளக்கங்களையும் அவர்களாகவே கண்டறிகின்றனர். அவ்வுரையாடலை ஊன்றிப் படிக்கும் ஒரு சாதாரண வாசகனும் தனக்குள் உள்ள அதே முரண்பாடுகளையும் குழப்பங்களையும் கண்டறிந்து அவற்றின் உண்மையான பொருளை அறிந்துகொள்ளும் வாய்ப்பினை பெறுகிறான். அறிவு என்பது பிறப்பால் வருவது என்பது போன்ற பார்ப்பனிய கருத்தாக்கங்களுக்கு நேர் எதிரானது பிளேட்டோவின் இந்த அறிதல் முறை. மனிதனாக பிறந்த எவரும், அவர் ஒரு அடிமையாக இருந்தாலும் அல்லது ஒரு பேரரசனின் மகனாக இருந்தாலும், அவன் கொண்டுள்ள உத்வேகமும் அவனுடைய இடைவிடாத முயற்சியும்தான் அவனை உச்சத்திற்கு கொண்டு செல்கிறது என்பதை தன் எழுத்துக்களின் மூலமாக இவ்வுலகத்திற்கு பறைசாற்றிச் சென்றுள்ளார் பிளேட்டோ.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.