
மதமும் மதமாற்றமும்
மதமும் மதமாற்றமும் - டாக்டர் தொல்.திருமாவளவன்
இந்தியாவின் தென்கோடியில் உள்ள மீனாட்சிபுரம் எனும் கிராமத்தில் தலித் மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறினர். மீனாட்சிபுரம் தலித்துகளின் இசுலாமிய மதமாற்றம் இந்தியா முழுமைக்கும் பெரும் சலனத்தை ஏற்படுத்தியது. ஏராளமான விவாதங்கள் அத்தருணத்தில் மேலெழும்பின.
மீனாட்சிபுரம் மதமாற்றம் குறித்தான பன்முகப்பட்ட விவாதங்கள் மாணவப்பருவத்தில் இருந்த காலகட்டத்தில் என்னைப் பெரிதும் பாதித்தது. அதன் காரணமாக எனது முதுகலை படிப்பிற்குப் பின்னர் முனைவர் பட்ட ஆய்வை "பாதிக்கப்பட்டோரியல் பார்வையில் மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்" எனும் தலைப்பில் ஆய்வு செய்தேன். அந்த ஆய்வின் ஒரு சிறு பகுதியே இந்நூல்.
தொல். திருமாவளவன்
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.