இதன் விலை ரூபாய் மூவாயிரம்
திராவிட சமுதாயத்தின் சீரழிவுக்குக் காரணம் பார்ப்பனீயம். பிறவியினாலேயே உயர்வு தாழ்வு கூறும் கொடுமை இந்தியத் துணைக் கண்டத்துக்கே ஒரு தனிச் சிறப்பு. உலகில் வேறு எங்கும் காணமுடியாத பெரும்புதிர் பார்ப்பனியம் பார்ப்பனீயம் ஓர் வாழ்க்கை அறை. அந்த ஏற்பாடு உருவாக்கப்பட்ட கால முதல், உருக்குலையாமல், இன்றும் இளமையோடு நாட்டு மக்களின் நெஞ்சிலும், நாவிலும், நடத்தையிலும் நர்த்தனமாடிக் கொண்டு இருக்கிறது. பொருள் இயல் கோட்பாடுகளும், அவைகளை யொட்டி எழுந்த சமுதாய அமைப்புகளும் முதலுக்கும் முடிவிற்கும் உட்பட்டு, வேறு சில புதுப்புது பிறவிகள் எடுத்து உலகில் உலாவுகின்றன. ஆனால் பார்ப்பனீயம் மட்டும் காலம் தரும் கிழத்தன்மைக்கு பலியாகாமல் பாரில் பகட்டாக, குகை வாழ்வு முதல் கோட்டையில் குடியேறிய காலம் வரையில் எப்படி வாழ முடிகிறது? இன்றும் பார்ப்பனீயத்தின் தன்மை இதுதான்.