தென்னிந்தியாவில் பாபாசாகேப் அம்பேத்கர்
பேரா. முனைவர் க. ஜெயபாலன்
பாபாசாகேப் அம்பேத்கரின் முதல் தென்னிந்திய வருகை 1932-ல் தொடங்கி 1954-ல் இறுதிப் பயணம் வரை நூல் பகுதி 50 கட்டுரைகளாக விரிந்துள்ளன.
பின் இணைப்புகளாக 14 பகுதிகள் இணைக்கப்பட்டுள்ளன.
இந்த அரிதான பணியை ஐயா மு.தேவகுமார், ஐயா துரை. ராஜேந்திரன், ஐயா வாலாசா வல்லவன் உள்ளிட்ட அனைவரும் அணிந்துரைகள் தந்து வாழ்த்தி உள்ளனர்.
அரிதான பல்வேறு உரைகளும் திறனாய்வுக் கருத்துக்களும் பாபாசாகேப் அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த பல்வேறு தலைவர்களின் சிந்தனைகளும் இந்த நூலில் அரிதாக தேடி முயன்று மொழிபெயர்க்கப்பட்டு அளிக்கப்பட்டுள்ளன.
50க்கும் மேற்பட்ட ஒளிப்படங்களில் அகில இந்திய அளவில் அண்ணல் அம்பேத்கர் வரலாறுகளில் இடம்பெறாத பல தென்னிந்திய வருகை தொடர்பான படங்கள் இடம் பெற்றுள்ளன.
எழுத்தாளர் யாக்கன் அவர்களின் கைவண்ணத்திலும் பேராசிரியர் பெ.விஜயகுமார் அவர்களின் கடும் உழைப்பிலும் இந்நூல் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.