திராவிட இயக்கமும் சமூக நிதியும் தொகுதி - 2
தமிழ் இன, மொழி உணர்வு, சமூக நீதி, பகுத்தறிவு, மனித உரிமைக் காப்பு ஆகியனவே திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் என்றாலும், அவற்றுள்ளும் சமூக நீதியே உயிர் கொள்கையாகத் திகழ்கின்றது. சாதி ஒழிப்பு, பெண் விடுதலை ஆகிய இரண்டு குறிக்கோள்களை முதன்மையாகக் கொண்டது தமிழ் மண்ணின் சமூக நீதி என்று கூறலாம். எனவே, சாதி ஒழிப்புக்கு முன்னோடியான வகுப்புவாரி உரிமை, இடஓதுக்கீடு ஆகியன குறித்தும், பாலின சமத்துவம் குறித்தும் இந்நூலுள் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. கல்வி, வேலைவாய்ப்பு, அரசு அதிகாரம் ஆகியவற்றில் மட்டுமின்றி, விளையாட்டு, அறிவியல், திரைப்படம், ஊடகவியல் போன்ற பல துறைகளிலும் சமூக நீதியின் தேவைகள் எவ்வாறு உள்ளன என்பதைக் கட்டுரைகள் கூறுகின்றன. அத்தேவைகளை நிறைவு செய்ய, திராவிட, அம்பேத்கரிய, பொதுவுடமைக் கட்சிகள் ஆற்றிய பணிகளும் கட்டுரைகளாக இடம்பெற்றுள்ளன. சாதிய சமூகத்தில், சாதிச் சங்கங்களின் பங்களிப்பு குறித்த அரிய கட்டுரை ஒன்றும் இடம் பெற்றுள்ளது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.