அறிஞர் அண்ணாவின் பகுத்தறிவு களஞ்சியம்
தந்தை பெரியார் அவர்கள் தான் நம் இனத்தின் மானமீட்பர்; பிறவி இழிவைத் துடைத்தெறிய உழைத்த பிறவிப் போர்வீரர்- போர்ப்படைத் தலைவர்; அவர் தம் படையின் தன்னிகற்ற, தளபதிகளில் முதன்மையானவர் அறிஞர் அண்ணா அவர்கள். அறிவு ஆசான் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் தலைசிறந்த மாணாக்கர்களில் ஒருவர் அறிஞர் அண்ணா . தந்தை பெரியார் என்ற அந்தக் குருவிடம் அண்ணா கொண்ட “பக்தி '' ஈடுஇணையற்றது! அய்யாவிடம் அரசியல் அணுகு முறையில் மாறுபட்டாலும், அடிப்படைக் கொள்கை , லட்சியங்களில் மாறுபடாத காரணத்தால் தான் 1967இல் அவர் ஆட்சித் தலைவராகத் தேர்வு பெற்றவுடன், நேரே தனது முக்கிய தோழர்களுடன் 200 மைலுக்கு அப்பால் அய்யா இருந்தாலும், இதயத்தில் நெருக்கம் என்பதால் திருச்சிக்கு உடனே சென்று, தனது வெற்றியை அவர்தம் காலடியில் வைத்து, அய்யாவின் ஆசியை, அன்பை, வாழ்த்தைப் பெற்று வரலாறு படைத்தவர் அண்ணா !
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.