ஆயிஷா
ஒரு சிறுகதை. கடந்த சில ஆண்டுகளாகவே தமிழகத்தில் கல்வி வட்டாரங்களில் பணிபுரியும் எல்லோரையும் ஆட்டிப் படைக்கும் சிறுகதை. இன்று பாரதியின் மூலம் எல்லோருக்குமான வாசிப்புக்கு வந்துள்ளது. பள்ளி ஆசிரியை ஒருவருக்கும் ஆயிஷா என்கிற மாணவிக்கும் இடையில் கல்வி தொடர்பான கேள்விகள் முலம் மலரும் உறவு கதையின் அடிச்சரடாக ஓடுகிறது. ஆசிரியருக்கும் மாணவருக்கும் இடையிலான நட்பு, அப்பா - மகன் உறவு, அம்மா- மகள் உறவு பற்றியெல்லாம் கூடக் கதைகள் சில வந்ததுண்டு. பாடத் திட்டத்தோடு கூடிய கேள்விகள் அக்கேள்விகள் வழியே அக்குழந்தையின் மேதமையை சட்டெனெ அடையாளம் கண்டுவிடும் ஆசிரியை. ஆனால் அவளை சரியாக அடையாளம் காண முடியாத செக்குமாட்டு வாழ்க்கையில் சிக்கிக் கொண்ட பிற சக ஆசிரியர்கள் அவளை நடத்தும் விதம் அவள் மீது பிரயோகிக்கும் வன்முறை. இதையும் மீறி இந்த ஆசிரியையுடன் அவள் கொள்ளும் சினேகம். நேசம். புரிந்து கொண்ட ஒருவராவது பள்ளியில் இருக்கிறாரே என்கிற பெருமிதம். கேள்விகளால் தொடரும் இந்த நட்பு. ஆனால் இறுகிப் போன கல்விமுறை ஆயிஷாவை என்ன செய்துவிட்டது? கதையை வாங்கிப் படித்துத்தான் ஆக வேண்டும்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.