மக்கள் ரசித்த திரைப்படங்களும் மார்க்சிய விமர்சனமும்
முதலாளியம் கண்டுபிடித்த சிறந்த பொருள்களுள் சினிமாவும் ஒன்று. மேற்கு நாடுகளைப்போல சினிமா, கலையாகவோ தொழில்நுட்பமாகவோ கொள்ளப்படாமல் பொழுதுபோக்குச் சாதனமாகவே தொடக்கம் முதல் இன்றுவரை இந்தியாவில் பார்க்கப்படுகிறது. முதலாளிகள் சரக்கு விநியோகம் லாபம் என்று சினிமாவைப் பார்த்தனர். சரக்குத் தடைபடாமல் இருக்கத் தொடர் உற்பத்தி என்ற நிலையில் பிதுக்கித் தள்ளினர். சினிமா பற்றிய தொழில்நுட்பங்களைப் பொதுமக்கள் கற்றுக்கொள்ளாமல் இருக்கும் வகையைச் செய்துவந்தனர். அதனால் நல்ல சினிமா எது? வியாபார சினிமா எது? என்ற நுட்பத்தை இரகசியமாக வைத்தனர். இதனால்தான் கதாநாயகன் வழிபாட்டையும் யதார்த்தத்துக்குப் புறம்பான காட்சிகளையும் மக்களை ஏற்கவைத்தனர். அதனால்தான் பெரியாரும் இராஜாஜியும் திரைப்படங்களைத் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். மார்க்சியத் தத்துவம் அறிந்த இயக்குநர்கள் வெளிநாடுகளில் வெகுஜன சினிமாவை உருவாக்கினர். இங்கோ முதலாளி உருவாக்கியதால் அதன் வடிவமும் உள்ளடக்கமும் கேள்விக்குரியதாகவே இன்றளவும் இருக்கிறது.
நிழல் ப.திருநாவுக்கரசு