கார்ல் மார்க்ஸ் அறிவுப் பயணத்தில் புதிய திசைகள்(1881 - 1883)
கார்ல் மார்க்சு என்கிற கார்ல் என்ரிச் மார்க்சு (Karl Heinrich Marx, கார்ல் என்ரிச் மார்க்ஸ்-மே 5, 1818, செருமனி–மார்ச் 14, 1883, இலண்டன்) செருமானிய மெய்யியலாளர்களுள் ஒருவராவார். அறிவியல் சார்ந்த பொதுவுடைமையை வகுத்தவருள் முதன்மையானவர். மெய்யியலாளராக மட்டுமல்லாது அரசியல் பொருளாதார வரலாற்றியல் வல்லுனராக, தலைசிறந்த ஆய்வறிஞராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக, புரட்சியாளராகக் கார்ல் மார்க்ஸ் அறியப்படுகிறார். பல்வேறு துறைகளிலும் ஏராளமான விவகாரங்கள் பற்றிய ஆய்வுகளையும் கருத்துக்களையும் இவர் வெளியிட்டுள்ளார் என்றாலும் இவரது ஆய்வுகளும், கருத்துக்களும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளின் அடிப்படையில் வரலாற்றை ஆய்வதாகவே அமைந்தது. பொதுவுடைமைக் கொள்கைகளின் மூலவர்களுள் ஒருவராக கார்ல் மார்க்சு கருதப்படுகிறார். மற்றையவர் பிரெட்ரிக் ஏங்கல்சு ஆவார்.
கார்ல் மார்க்ஸின் கடைசி மூன்றாண்டுகளில், அவர் சொந்த வாழ்வில் எதிர்கொண்ட கடும் சோதனைகளையெல்லாம் மீறி, கணிதவியல் ஆராய்ச்சிக்கு முக்கியப் பங்களிப்புச் செய்ததையும், மானுடவியலில் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில் கிடைத்த முடிவுகளையும், எண்ணற்ற வரலாற்று நூல்களிலிருந்து கற்றவற்றையும் அவர் தமது அரசியல், பொருளியல், கோட்பாடுகளைச் செழுமைப்படுத்தப் பயன்படுத்தியதையும் எடுத்துரைக்கிறார் மார்செல்லோ முஸ்ட்டோ.
மார்க்ஸின் செழுமையான இயக்கவியல் பார்வையை மட்டுமின்றி, அவரது கலை - இலக்கிய இரசனைகளையும், கனிவும் அன்பும் பாசமும் நிறைந்த கணவராக, நண்பராக அவர் வகித்த பாத்திரங்களையும் சிந்தனைக்கு விருந்தாக்கும் இந்த நூல், வியப்பு தரும் பல வரலாற்றுச் செதிகளையும் உள்ளடக்கியுள்ளது
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.