ஒரு எருதும் சில ஓநாய்களும் (STORY OF A CAREER)
ஒவ்வொரு பார்ப்பனரும் அவன் வைதிகனாக இருந்தாலும் அல்லது வைதிகன் அல்லாதவனாக இருந்தாலும், அவன் புரோகிதனாக இருந்தாலும் அல்லது கிரகஸ்தனாக இருந்தாலும், அவன் படித்த அறிவாளியாக இருந்தாலும் அல்லது படிக்காதவனாக இருந்தாலும் பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநாட்டுவதில் அளவற்ற ஆர்வமும் அக்கறையும் கொண்டவனாக இருக்கிறான்.
ஒரு பார்ப்பன அறிஞனது அறிவாற்றல் தனது நலனைப் பாதுகாக்கவேண்டும் என்ற கவலையால், ஏக்கத்தால் பெரிதும் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த அகக் கட்டுப்பாட்டால் அவன் வெகுவாக அவதியுறுகிறான்; இதன் விளைவாக தனது அறிவாற்றல் நேர்மையோடும் நியாயத்தோடும் செயல்பட அவன் அனுமதிப்பதில்லை.
-அண்ணல் அம்பேத்கர்
பார்ப்பனர்களின் படிப்பு அவர்களின் அறிவை விசாலப்படுத்துவதில்லை.
பார்ப்பனர்களின் வாத தர்க்க ஞானம் அவர்களை நியாயவான்களாக ஆக்குவதில்லை.
விவரம் தெரிந்த பார்ப்பனர்கள் வெகுஜன நன்மையை வளர்க்க ஒரு துரும்பும் அசைப்பதில்லை.
-சங்கமித்ரா