திருக்குறளும் திராவிட இயக்கமும் - வாழ்த்துரை
என்னிடம் முனைவர்பட்ட ஆய்வாளராக சேர்ந்த முதல் தொகுதி மாணவர்களுள் ஒருவர் நூலாசிரியர் பா.குப்புசாமி ஆவார். சிறந்த உழைப்பாளர். இதை அவரது இந்த நூலின் மூலம் அறியமுடிகின்றது. இன்றைய முனைவர் பட்ட ஆய்வுகள் பல கல்லூரி, பல்கலைக் கழகங்களில் எளிமையான தலைப்பை எடுத்து விரைவாக முடித்து முனைவர்பட்டம் பெறும் ஆய்வாக அமைந்துள்ளன. பொதுவுடைமை, சமத்துவம் போன்ற பொருண்மையிலான தலைப்பினைத் தேர்ந்தெடுப்பதில் மாணவர்கள் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால் நூலாசிரியர் திராவிட இயக்கச் சிந்தனைகளை செவ்வியல் இலக்கியமான திருக்குறளுடன் பொருத்திப்பார்த்துள்ளார்.
தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள் பல காலமாக இருந்து கொண்டிருக்கின்றன. இயக்கங்களுக்குள் பல கருத்து முரண்களும் இருக்கின்றன. குறிப்பாக திராவிட இயக்கம் மரபுவழி இயக்கங்கள் பலவற்றுடன் மிகுந்த முரண்பாடு கொண்டதாகும். இயக்க கொள்கைகளைப் பின்பற்றுவோர் தான் சார்ந்த இயக்கத்தின் மீது பற்றும், பிறவற்றின் மீது வெறுப்பும் கொள்வது இயல்பு உயர்ந்த சிந்தனையாளர்களிடத்தும் இது காணப்படுகின்றது. ஆனால் நூலாசிரியர் எவ்வித விருப்பு வெறுப்பையும் ஆய்வில் வெளிப்படுத்தாமல் நடுநிலையோடு தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்நூல் திராவிட இயக்க உரைகள் வழி திராவிட இயக்கச் சிந்தனைகளை ஆய்வதை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது. நூலில் திருக்குறளுக்குப் பல்வேறு உரைகள் தோன்றுவதற்கான காரணங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றார். திராவிட இயக்கத்தவர் அரசியலுக்குள் இருந்து அதன் செல்வாக்குடன் திருக்குறளுக்காகச் செய்த சேவைகள் குறித்து நூலின் மூன்றாம் பகுதி அமைந்துள்ளது. இவற்றை ஆசிரியர் தொகுத்தளித்ததோடல்லாமல் அவற்றைக் காரண காரியத்துடன் நிறுவியிருப்பது பாராட்டுதற்குரியது
திருக்குறள் பற்றிய பொதுவான கட்டமைப்புகள் (பிம்பங்கள்) பல இந்த நூலினைப் படித்த பிறகு உடைபட்டுப்போகின்றன. திராவிட இயக்கச்சிந்தனைகள் திருக்குறளில் இருப்பதால் திராவிட இயக்கத்தினர் அதற்குப் பெருமை சேர்க்கக்கூடிய பல்வேறு பணிகளை மேற்கொண்டனர். இப்படியான பணிகளை மேற்கொண்டதால் திராவிட இயக்கம் மேலும் பெருமை அடைந்தது.
தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள் பல காலமாக இருந்துகொண்டிருக்கின்றன. இயக்கங்களுக்குள் பல கருத்து முரண்களும் இருக்கின்றன. குறிப்பாக திராவிட இயக்கம் மரபுவழி இயக்கங்கள் பலவற்றுடன் மிகுந்த முரண்பாடு கொண்டதாகும். இயக்க கொள்கைகளைப் பின்பற்றுவோர் தான் சார்ந்த இயக்கத்தின் மீது பற்றும், பிறவற்றின் மீது வெறுப்பும் கொள்வது இயல்பு உயர்ந்த சிந்தனையாளர்களிடத்தும் இது காணப்படுகின்றது. ஆனால் நூலாசிரியர் எவ்வித விருப்பு வெறுப்பையும் ஆய்வில் வெளிப்படுத்தாமல் நடுநிலையோடு தன் ஆய்வு முடிவுகளை வெளிப்படுத்தியுள்ளார்.
நூலாசிரியரின் முதல் நூல் இது. அவரது கடின உழைப்பும் ஆற்றலும் தமிழ் உலகுக்கு இதுபோன்று இன்னும் பல நூல்களை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.
முனைவர் ஆ ஏகாம்பரம்
இணைப் பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை சென்னைப் பல்கலைக்கழகம்
சென்னை - 5
தொடர்புடைய மற்ற பதிவுகள்: