பார்த்தீனியம் - என்னுரை
கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட தமிழ்நதி, ஈழத்தின் திருகோணமலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். புலம்பெயர்ந்து தற்போது கனடாவில் வாழ்ந்துவருகிறார்.
'சூரியன் தனித்தலையும் பகல்' (கவிதைகள்), 'நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது' (சிறுகதைகள்) 'இரவுகளில் பொழியும் துயரப்பனி' (கவிதைகள்), 'கானல் வரி' (குறுநாவல்), 'தேவதைகளும் கைவிட்ட தேசம்' (கட்டுரைகள்) ஆகிய ஐந்து நூல்கள் இதுவரையில் வெளியாகியிருக்கின்றன.
நாங்கள் விரும்புகிறோமோ இல்லையோ எமது வாழ்வில் அரசியல், செல்வாக்கு செலுத்திக்கொண்டேயிருக்கிறது. ஈழத்தமிழராகிய எங்களைப் பொறுத்தமட்டில் அரசியலையும் வாழ்வையும் பிரித்துப் பார்க்க இயலாது. இது இலக்கியங்களிலும் எதிரொலிக்கிறது.
எமது வரலாற்றை புனைவின் மூலமோ வரலாற்று நூல் வழியோ முழுமையாக எழுதிவிடமுடியாது. அவரவர் கண்ட சம்பவங்களையும், செவியுற்ற மற்றும் ஆராய்ந்தறிந்த செய்தி களையும் வாழ்வையும் வாதைகளையும் அவரவர் புரிதலுடனும் பார்வையுடனும் எழுதிச் செல்கிறோம். எழுதப்பட்டவற்றிலிருந்து உண்மையை பிரித்தோ கோர்த்தோ கண்டடைவது வாசகரின் ஒட்டுமொத்தமான வாசிப்பு மற்றும் தேடலைச் சார்ந்தது.
1983-1990 காலப்பகுதியில், நேர்முகமாக நான் கண்டதை, அனுபவித்ததை, உய்த்து உணர்ந்ததை, கேட்டறிந்ததை எனது பார்வையில் நாவலாக எழுதியிருக்கிறேன். மனச்சாய்வுகளை, பக்கச்சார்பின் பள்ளங்களை உண்மையைக் கொண்டு நிரப்பும் கடமை அரசியல் வரலாற்றினைத் தொட்டெழுதும் படைப் பாளிக்கு உள்ளது எனும் பிரக்ஞையோடே இதை எழுதினேன். புனைவிலக்கியத்தில் அத்தகைய பிரக்ஞை நிலை, கலையின் இயல்பான ஓட்டத்திற்கு எதிரானது என்று சிலர் கூறக்கூடும். அரசியல் புதினங்களில் வரலாறு குறித்த பிரக்ஞையோடு இயங்கவில்லையெனில், அதுவும் கலைக்கு அடிப்படையாக இருக்கவேண்டிய நேர்மைக்கு எதிர்த்திசையில் செல்லக்கூடியதே.
இரண்டு தனிமனிதர்களுக்கிடையேயான உறவில், சமூகத்தின் அரசியல் சூழல் எங்ஙனம் செல்வாக்குச் செலுத்துகிறது என்பதை மையமாகக் கொண்டு இந்நாவல் இயங்குகிறது. இந்த நாவல், தன் மண்ணையும் மக்களையும் நேசித்த ஒரு போராளிக்கும், அவனை நேசித்த காரணத்தால் அலைவுகளுக்குட்பட்ட ஒரு பெண்ணுக்குமிடையில் நிகழ்ந்த கதை இது.
அமைதிப்படை என்ற அடைமொழியோடு உள் நுழைந்த இந்தியப் படை ஈழமண்ணில் ஆடிய கோரதாண்டவத்தை ஈழத்தமிழர்கள் மரணபரியந்தம் மறக்கமாட்டார்கள். 'அநாதரட் சகர்கள்' எங்ஙனம் ஆட்கொல்லிகளாக மாறினார்கள் என்பதை, மானம் காக்க வந்தவர்கள் எங்ஙனம் இழிவுசெய்தார்கள் என்பதை, இந்தப் படைப்பு அனுமதித்த அளவுக்குப் பதிவு செய்திருக் கிறேனென்றே நம்புகிறேன்.
நாவல் எழுதுவதென்பது, நிகழ்வாழ்வுக்குச் சமாந்தரமாக இன்னொரு வாழ்வினை வாழ்தலாகும். அதிலும், போர் நடந்த, நடக்கும் நிலத்தின் காயங்களை எழுதுகையில், காயத்தின் பொருக்கு இளகிக் குருதி பீறிடுவது தவிர்க்கவியலாதது. இதைத் தொடங்கியபோது இருந்த ஆளாக முடித்தபோது இருக்கவில்லை என்பதை இங்கு பதிவு செய்தே ஆகவேண்டும். இந்நாவலிலேயே, மன உக்கிரத்திலிருந்து தப்பிப்பதற்காக, வேண்டுமென்றே எழுதாமல் விலகிச் சென்ற இடங்கள் அநேகம். சராசரி மனிதமனத் தின் தாங்குசக்திக்கு அப்பாற்பட்ட துயரத்தையும் பயங்கரத்தையும் கொண்டது ஈழ வரலாறு என்பதற்கு, இவ்வாறு எழுத்திலிருந்து தப்பியோடுவதும் சாட்சியமாகிறது.
எதிர்பார்த்த காலத்தைவிடவும் அதிகமான காலத்தை இப்படைப்பு எடுத்துக்கொண்டு விட்டது. எனினும், எழுதும் போதே வாழ்கிறேன்' என நான் உணர்வதனால், குறையொன்றுமில்லை.
எல்லாவற்றைக் குறித்தும் பரந்த கண்ணோட்டத்தோடு உரையாடக்கூடிய நண்பர்கள் வாய்ப்பது அரிது. நான் அத்தகைய இருவரை நண்பர்களாக அடையப் பெற்றவள். எனது எழுத்துக்கு உறுதுணையாக இருந்த ஆத்மார்த்த நண்பர்கள் இராஜ குமாரனுக்கும் ஜோஸ் அன்றாயினுக்கும் (நன்றி, மன்னிப்பு இன்னபிற சம்பிரதாயங்களை அவர்கள் விரும்பாதபோதிலும்) இச்சமயம் நன்றி கூறியே ஆகவேண்டும்.
ஜோஸ் அன்றாயின் கறாரான விமர்சகர். மேலும், அவரிட மிருந்து விமர்சனத்தைப் பெறுவதைவிட, கடினமாக முயன்றால் கல்லில் நார் உரித்துவிடலாம். அதையுங் கடந்து அவரால் கூறப்பட்ட விமர்சனங்கள் அந்நேரங்களில் எனக்கு மனவேதனை அளிக்கும் அளவுக்குக் கடுமையாக இருந்தபோதிலும், அவை எந்தளவு அவசியமாயிருந்தன என்பதை இந்நாவல் நிறைவு பெற்றிருக்கும் தருணத்தில் உணர்கிறேன். அவரால் முன் வைக்கப்பட்ட விமர்சனங்களே, என்னுரையை எழுதும் இந்நாளில், நிறைவாக உணரக் காரணமெனில் அது மிகையன்று.
காலக் குழப்பங்கள், தரவுகளில் தெளிவின்மை ஏற்பட்ட போது அவற்றைத் தெளிவுபடுத்தி மேலதிக தகவல்களைத் தந்தவர் எனது வாழ்நாள் தோழர் இராஜகுமாரன். "இவர்களுக்கெல்லாம் என்ன எழுதத் தெரியும்?" என்று இலக்கியம் அறிந்த சிலரே பெண்வெறுப்பை உமிழும்போது, "உன்னால் எழுதப்படும் ஒவ்வொரு வாக்கியத்தையும் நேசிக்கிறேன்” என்று கூறி என்னை மேற்செல்லத் தூண்டியவர் அவர். என்னைத் தன் சகபயணி யாகவும் தோழியாகவும் கருதும் அவருக்கு எனது அன்பும் நன்றியும்.
ஆசானாகவும், தோழனாகவும் சமயங்களில் தந்தையாகவும் -ந்துகொள்கிற, எண்ணுந்தோறும் இவர் மனிதர் இவர் மனிதர்' ன எண்ணி நெகிழ்ந்துபோக வைக்கிற பெருமதிப்புக்குரிய ரபஞ்சன் அவர்களுக்கும் நன்றிகள். அடிப்படையில் சோம் பறியாகிய என்னை எழுதத் தூண்டுவதென்பது சாதாரண டயமல்ல. பிரபஞ்சன் அவர்களைச் சந்தித்த நாட்களிலெல்லாம் ழுத்தின் அகத்தூண்டலைப் பெறாது திரும்பியதில்லை. அதற்கு, ழுத்தின் நிமித்தம் வாழும் அவருடைய வாழ்வும் ஒரு காரணமாகும்.
"முகநூலில் நேரத்தை விரயம் செய்யாதே, உருப்படியாக தாவது எழுது" என்று அன்பு கலந்த உரிமையோடு கண்டித்து, நாவலை நோக்கி என்னைச் செலுத்திய என் பெருமதிப்புக்குரிய ம்பை அவர்களுக்கும் நன்றிகள்.
இலக்கியம் என்ற பெருங்கனவை நோக்கி என்னை போதும் செலுத்தும் தோழி குட்டி ரேவதிக்கும் நன்றி.
தொலைதூரத்தில் இருந்தாலும், என்னைத் தொடர்ந்து சாகப்படுத்தி வருவதனால் மனதுக்கு அண்மையில் இருக்கும் 5.நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் எனது நன்றிகள்.
முடித்துவிடுவேன் என்று எண்ணியிருந்த காலத்தைக் ட்டிலும் அதிக காலம் எடுத்துக்கொண்டு தவணைகள் கூறி தபோதிலும், “எழுத்து கோரும் காலத்தைக் கொடுங்கள்” ரறுரைக்க, இலக்கியத்தின் பெறுமதி அறிந்த ஒருவரால் மட்டுமே லும். அத்தகைய ஒருவரே பதிப்பாசிரியர் யுகன். 'நற்றிணையின் வமைப்பு நேர்த்தியையும் தேர்ந்தெடுக்கும் உள்ளடக்கச் றிவையும் கடந்த புத்தகக் கண்காட்சியின்போது கண்டு வியந்த - விளைவே நான் அதனை வந்தடைந்திருப்பது. 'நற்றிணை' ன் அவர்களுக்கும் எனது மனம் நிறைந்த நன்றி.
இலக்கியத்தின் மீதான பெருங்காதலுக்கும், கழுத்தை நெருக்கிப் க்கும் லௌகீகத் தேவைகளுக்குமிடையில் கிடந்து அல்லலுறும் எறாடமே எனதும். இந்நாவலை எழுதிய காலத்தில், துவதையே நிறுத்தி விடலாமா என்று எண்ணுமளவிற்கு வுளைச்சலுள் வீழ்ந்துபோயிருந்தேன். அதற்கு, அடுத்தவர் ரறுப்பை என் தலையில் ஏற்றிக்கொண்டதே காரணம். அந்த இருண்ட தருணங்களிலெல்லாம், "நாங்கள் இருக்கிறோம்” என்று, லெழ உதவியவர்கள் எனது நண்பர்களே. அவர்களுள் தோழி ந்தாவின் எல்லையற்ற அன்பும் உதவியும் மறக்கக்கூடியதன்று. அவருக்கு எனது இதயபூர்வமான நன்றிகள்.
என்னைவிடவும் என்னைப் புரிந்து வைத்திருக்கும் எனது பத்திற்குரிய தோழி சபிதாவுக்கும், வார்த்தைகளைத் ந்தெடுத்துப் பேசவேண்டிய தேவையிராத அளவுக்கு நட்பை மட்டுமே பொருட்படுத்தும் என் அன்புத் தோழி பரமேஸ்வரிக்கும், நான் சந்தித்தவர்களுள் அற்புதமான நல்லிதயம் கொண்டவரும் எந்நாளும் என்மீது பிரியமும் அக்கறையும் உள்ளவருமாகிய நண்பர் பாஸ்கர் சக்திக்கும், சந்திக்கும் போதெல்லாம் என் எழுத்து குறித்துப் பேசி நம்பிக்கை ஊட்டிய தோழன் அய்யனார் விஸ்வநாதனுக்கும், எத்தனை காலம் கழித்து திரும்பிச் சென்றாலும் நட்பின் ஈரம் மாறாத எனதினிய சுகிக்கும், பள்ளிக் காலந்தொட்டு என் நன்மையன்றி வேறேதும் வேண்டாத நண்பன் உதயனுக்கும், சி.புஷ்பராணி, வினோதினி (கலிபோர்னியா), அன்பு (கனடா), வினோதினி பாலா (கனடா), பிரதீபா தில்லைநாதன், பிரசாந்தி, ஆகிய தோழமைகளுக்கும் எனது நன்றிகள்.
ஒரு நாடோடியை மகளெனச் சகித்துக்கொள்ளும் அப்பா அம்மா, என்மீது பேரன்பு கொண்ட மாமா மாமி, நான் பெறாத எனது பிள்ளைகள் (குறிப்பாக, என்னைப்போலவே என் எழுத்தையும் நேசிக்கும் அன்பு மகள் தீபா), எனது வலசைக் காலங்களில் என் பெற்றோருக்கு உறுதுணையாக இருந்த அன்புத் தோழி கிறேஸ் அந்தோனிப்பிள்ளை ஆகியோருக்கும் நன்றிகள்.
முன்னோடிகள் மற்றும் சகபயணிகள் என்றவகையில் தோன்றாத்துணையாக இருந்தவர்கள் பலர். அவர்களுள் பத்மனாப ஐயர், அ. யேசுராசா, இரமணீதரன் கந்தையா, தோழர் கி. நடராசன், யமுனா ராஜேந்திரன், ஸ்ரீரங்கன் விஜயரட்ணம், மு. புஷ்பராஜன், காலம் செல்வம், வளர்மதி (சென்னை), இரவி அருணாசலம், ரஞ்சகுமார், சேரன், வ.ஐ.ச. ஜெயபாலன், யுவபாரதி மணிகண்டன், சீலன் இதயச்சந்திரன், அசோக் யோகன் கண்ண முத்து, குணா கவியழகன், எஸ். திருச்செல்வம் (தமிழர் தகவல்), தீபச்செல்வன், சு. அகரமுதல்வன், கருணா (டிஜி கிராபிக்ஸ்), திலீப்குமார் (தாய்வீடு), க. வாசுதேவன் (பிரான்ஸ்) சுதன் (அருண்மொழிவர்மன்), நடராஜா முரளிதரன் (உரையாடல்), சி. மோகன், வாசுதேவன் (சென்னை), கோபி ரட்ணம், ரங்கநாதன் ரங்கசிறீ இவர்களுக்கும் எனது அன்பும் நன்றியும்.
சமகாலத்தில் எழுதிக்கொண்டிருக்கும் மேலும் பலரை உள்ளன்போடு நினைத்துக்கொள்கிறேன். ஆனால், எவருடைய பெயரையாவது குறிப்பிடத் தவறி அவர்களைப் புண் படுத்திவிடுவேனோ எனும் அச்சத்தில் எவரையும் குறிப்பிடாமல் தவிர்க்கிறேன். எழுத்தில் குறிப்பிடவில்லையெனினும், நீங்கள் என்னுள் இருக்கிறீர்கள்.
தமிழ்ந்தி
டிசம்பர் 01, 2015
சென்னை
அண்மைக்காலத்து வரலாற்றில் இலங்கையில் இன்னொரு அரசின் துணையுடன் நிகழ்ந்துள்ள தமிழின அழித்தொழிப்பு நிகழ்வுகளை உலகம் பார்த்துக்கொண்டுதான் இருந்தது. யுத்தத்தின் கரும்புகை ஈழத்து வானத்தில் இன்னும் படிந்தே கிடக்கிறது. அறம் ஒழித்த மனங்களின் கண்டுபிடிப்பே யுத்தம். யுத்தம் காதல் வாழ்வை சமூக வாழ்வை அன்பை குடும்ப உறவுகளை சிதைக்கிறது. மொத்தமாக மானுட மேன்மையை யுத்தம் கொல்கிறது.
தமிழ்நதியின் இந்தப் பார்த்தீனியம் இந்த உண்மைகளைத்தான் மனம் கசியும் விதமாக ஆற்றல் வாய்ந்த ஆனால் எளிய மொழியில் சொல் கிறது. காதலை, நட்பை, உயிர் கலந்த உறவுகளை, சமூக நேசத் தையும் சீரழித்த, கடந்த முப்பது ஆண்டுக்கால ஈழத் தமிழ்வாழ்வைத் துல்லியமாகச் சித்தரித்துக் கண்முன்னும் நம் மனசாட்சி முன்பும் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறார் தமிழ்நதி.
உலகத்தின் யுத்தகாலக் கலைப் படைப்புகளில் இந்தப் பார்த்தீனியம் குறிப்பிடத்தகுந்த படைப்பாகப் பல காலம் பேசப்படும்.
- பிரபஞ்சன்