மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் உள்ளே
உலகில் வாழும் தமிழர்களெல்லாம் தங்கள் இதயங்களையே அரியாசனமாக்கி அமர்த்தி அழகுபார்க்கும் அறிவு ஆசான். சாமானியர்களின் எழுச்சிக்கு வித்திட்ட சரித்திர நாயகன். தமிழ்நாடும், தமிழ்ச் சமுதாயமும் தழைக்க வழிவகுத்துத் தந்த தள நாயகன் எங்கள் அண்ணா!
- மு.கருணாநிதி
கடவுள் என்றால் யார்? அறிவைக் கொடுப்பவர் கடவுள். அன்பை வழங்குபவர் கடவுள். அறிஞர் அண்ணா இந்த நாட்டுக்கே அறிவை வழங்குகிறார். மக்களுக்கெல்லாம் அன்பை ஊட்டுகிறார். எனவே, அறிஞர் அண்ணாவைக் கடவுள் என்றால் மிகையாகாது.
- எம்.ஜி.இராமச்சந்திரன்
அரசியல் விடிவெள்ளி, சாதி, மத பேதங்களைச் சுட்டெரித்த சூரியன், தாய்மொழி காப்பதில் தன்மானக் காவலர், உரையாடலுக்கு ஓங்கு புகழ் சேர்த்த ஒளி விளக்கு, பெருந்தன்மையின் உச்சம், சமுதாயத் துறையில் சீர்திருத்தத்துக்காகவும், பொருளாதாரத் துறையில் மறுமலர்ச்சிக்காகவும் நம்முடைய மொழி, இனம், பண்பாடு காக்கவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்த நம் வழிகாட்டி அண்ணா.
- ஜெ.ஜெயலலிதா
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டுசெல்லும் முயற்சி...
நன்றி: தமிழ் இந்து