Maaperum Thamizh Kanavu, K.Ashokan
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் நூல்
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் தலைவரான அறிஞர் அண்ணாவின் நினைவைப் போற்றும் வகையில், ‘இந்து தமிழ்’ நாளிதழின் அங்கமான ‘தமிழ் - திசை பதிப்பகம்’ வெளியிடும் ‘மாபெரும் தமிழ்க் கனவு’ நூலின் அட்டை வெளியானது. தமிழ்நாட்டுக்கு ஜனநாயக அரசியலைக் கற்பித்த முன்னோடியான பேரறிஞர் அண்ணாவின் சிந்தனைகளையும், அவரது வரலாற்றையும் பேசும் இந்நூலை உலகின் மாபெரும் ஜனநாயகத் திருவிழாவான இந்தியத் தேர்தல் சமயத்தில் வெளிக்கொண்டுவருவது சாலப் பொருத்தமானது. ஏனென்றால், ஒரு சாமானியனாலும் அரசியல் கட்சி தொடங்க முடியும்; ஆட்சியைக் கைப்பற்ற முடியும் என்று முன்னுதாரணத்தைத் தமிழ்நாட்டின் வழி சுதந்திர இந்தியாவில் உருவாக்கியவர் அண்ணாதான்.
அண்ணா மறைந்து ஐம்பதாண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அண்ணாவின் அரசியல் இந்த அரை நூற்றாண்டாக நவீன தமிழ்நாட்டின் வரலாற்றில் ஏற்படுத்தியிருக்கும் மாற்றங்களையும் சுதந்திர இந்தியாவில் ஏற்படுத்திருக்கும் தாக்கங்களையும், சமகால சர்வதேச அரசியலில் அண்ணாவின் பொருத்தப்பாட்டையும் பேசும் முக்கியமான அறிவுஜீவிகளின் கட்டுரைகள், பேட்டிகள் இந்நூலில் வருகின்றன.
தமிழ்நாடு கண்ட மகத்தான அரசியல் ஆளுமையான பேரறிஞர் அண்ணாவின் வரலாற்றை அடுத்தடுத்த தலைமுறைகளுக்குக் கொண்டு செல்லும் முயற்சி...
எழுத்தாளர் | பல்வேறு எழுத்தாளர்கள் |
---|---|
பதிப்பாளர் | தமிழ் திசை |
பக்கங்கள் | 800 |
பதிப்பு | முதற் பதிப்பு - 2019 |
அட்டை | தடிமனான அட்டை |