பிம்பச் சிறை - நன்றி
இந்த நூலின் உருவாக்கத்தில் அறிவுப்பூர்வமாக எண்ணற்றோர் பங்களிப்பு செய்துள்ளார்கள். ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக நன்றி சொல்வது கடினமானது. எனினும் என்னுடைய நன்றிகளை குறிப்பாக வ.கீதா, எஸ். வி. ராஜதுரை, பத்மினி சுவாமிநாதன், ஏ.ஆர். வெங்கடாசலபதி, ஆனந்தி, எஸ். ஜெ.ஜெயரஞ்சன், ஜெ. ஆர். பாஷ்யம், கே.வெங்கடேஷ், ராகேஷ் குமார், ஜார்ஜ் மேத்யூ ஆகியோருக்கு உரித்தாக்குகிறேன். இவர்களுடன் மதிப்பு மிகுந்த உரையாடல்களை புத்தகத்தின் வெவ்வேறு கட்டங்களில் நிகழ்த்தினேன். புத்தகத்தின் வெவ்வேறு வரைவுகளை படித்து ஈடில்லாத ஆலோசனைகளை இவர்கள் வழங்கினார்கள். நூலின் வரைவு குறித்து கருத்துக்கள் வழங்கியதோடு புத்தகத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள திரைப்பட பாடல் வரிகளை தமிழில் இருந்து ஆங்கிலத்துக்கு ஏ. ஆர். வெங்கடாசலபதி மொழி பெயர்த்து தந்தார். பொன் கோதண்டபாணி கடும் சிரமங்களுக்கு இடையே பல வருட உழைப்பில் எம்.ஜி.ஆர்., அ.இ.அ.தி.மு.க குறித்து சேகரித்து வைத்திருந்த தரவுகளை தாராள மனதோடு வழங்கினார். இந்த நூலின் உருவாக்க காலத்தில் பலர் குறிப்பாக அருண் குமார் பட்நாயக், பருண் டே, ஆர். எஸ். ராவ், சரஜீத் மஜூம்தார், அஞ்சன் கோஷ் எந்தக் கேள்விகளை எழுப்ப வேண்டும் என்பது குறித்து உத்வேகம் மிகுந்த உரையாடல்களை பரிசளித்தார்கள். இந்த நூலின் முந்தைய பதிப்பை முழுக்க வாசித்து அதில் இருந்த நடை தடுமாற்றங்கள், கருத்துப்பிழைகள் ஆகியவற்றை சந்தோஷ் சதானந்த், சினேகா ராகவன் சுட்டிக்காட்டியதைத் திருத்தியிருக்கிறேன். இவர்கள் அனைவருக்கும் நன்றியுடைத்து.
அன்புடன்
எம். எஸ். எஸ். பாண்டியன்