விழுமிய நெஞ்சர் வெள்ளையாம்பட்டு சுந்தரம்
பிறந்த ஊருக்கு பெருமை சேர்க்கும் விதமாக, தங்கள் பெயருக்கு முன்பு ஊரின் பெயரை சேர்த்துக்கொண்டு புகழ் படைத்தவர்கள் வரிசையில் கவிஞர் வெள்ளையாம்பட்டு சுந்தரமும் ஒருவர். தெ.பொ.மீ., மு.வ., கா.அப்பாத்துரை, கவிஞர் கண்ணதாசன், தோழர் பா.ஜீவானந்தம், கவிஞர் சுரதா, கி.வா.ஜ. முதலியவர்களுடன் நெருங்கிப் பழகியவர். கல்வெட்டு, சிற்பம், கட்டடம், ஓவியம், கோட்டை, கோயில் முதலியன குறித்து பல நூல்களையும் எழுதியுள்ளார். துணை இயக்குநராகவும், மாலையிட்ட மங்கை என்ற படத்தில் "நீயும் பொம்மை நானும் பொம்மை' என்ற பாடலை இயற்றி திரைப்படப் பாடலாசிரியராகவும், சேகர் பதிப்பகத்தின் உரிமையாளராக 1, 100 நூல்களைப் பதிப்பித்தும் புகழ்பூத்தவர். அவரை நினைவுகூரும் விதமாக வெளிவந்துள்ள இந்த நினைவு மலரில், ஒளவை நடராசன், கி.வீரமணி, வீ.அரசு, நடன. காசிநாதன், கி.நாச்சிமுத்து, ஜி.இராமகிருஷ்ணன்(இ.ஆ.ப.), சா. ஜகத்ரட்சகன், மு.பொன்னவைக்கோ, நெல்லை சு. முத்து, சுப.வீரபாண்டியன், இ.சுந்தரமூர்த்தி முதலிய அறுபத்து நால்வர், அவரின் பல்துறைசார்ந்த ஆளுமைகளை நெஞ்சம் நெகிழச் சொல்மாலையாகவும், கவித்தோரணமாகவும் அலங்கரித்துள்ளனர். வெள்ளையாம்பட்டு சுந்தரத்தின் பன்முகத் தன்மைகொண்ட ஆளுமைப் பண்புகளை இந்நினைவு மலர் தொகுத்து வெளிக்கொண்டு வந்திருக்கிறது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.