வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
வரலாற்றுப் பொருள்முதல்வாதம்
மார்க்சியம் என்பது ஒரு தத்துவம். ஆனால் ஆன்ம விசாரம் செய்யும் சாக்குருவித் தத்துவம் அல்ல. மாறாக , அது ஓர்
உண்மையான, உயிர்த்துடிப்புள்ள சமூக விஞ்ஞானமாகும். உயிர் விஞ்ஞானம், பொருளாதாரம் , சமூகவியல், தத்துவம், இலக்கியம் , இயற்பியல், அரசியல் எனப் பல்வேறு அறிவுத்துறைகளை உள்வாங்கிக் கொண்ட ஒரு நடைமுறைத் தத்துவம். இதன் விளைவாக கல்வேறு அறிவுத் துறைகளிலும் ஊடுருவி நிற்கும் தன்மையது. காலம் கடந்ததாய் இல்லாமல் காலத்தை வென்று நிற்பது. இயக்க இயல் பொருள்முதல்வாதம், வரலாற்றுப் பொருள் முதல் வாதம். அரசியல் பொருளாதாரம் என்ற மூன்று கூறுகளை உள்ளடக்கியதே மார்க்சியமாகும். இவற்றுள் வரலாற்றுப் பொருள் முதல்வாதம், வரலாறு குறித்த மார்க்சிய அணுகுமுறையை வெளிப்படுத்துவதுடன் மட்டுமின்றி, வரலாற்றுப் புரிதலுக்கும், வரலாற்று வரைவுக்கும் வழிகாட்டும் தன்மையது. இத்தகைய ஆற்றல் வாய்ந்த வரலாற்றுப் பொருள்முதல்வாதம் குறித்து உலகின் பல்வேறு மொழிகளில் பல்வேறு நூல்கள் வந்துள்ளன